இந்தியாவின் தாக்குதல் பற்றி தெரிந்திருந்தும் நாங்கள் நிதானத்தை கடைபிடித்தோம்...! - பாகிஸ்தான் அமைச்சர் இஷாக் தார்
We maintained restraint despite knowing about India attack Pakistani Minister Ishaq Dar
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக நள்ளிரவு அதாவது அதிகாலை 1:05 முதல் 1:30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதற்கு ''ஆப்ரேஷன் சிந்தூர்'' என பெயரிடப்பட்டுள்ளது.இதில், 9 முகாம்கள் மீது 26 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ''இஷாக் தார்'':
இந்நிலையில், தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ''இஷாக் தார்'' தெரிவிக்கையில், "இந்தியா நள்ளிரவு நடத்திய வான்தாக்குதல் திட்டமிட்ட செயலாகும். ஆனால் உண்மை என்ன? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக நேற்றிரவு 10 மணிக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைக்க பெற்றோம். அந்த நேரத்தில் கூட பாகிஸ்தான் நிதானத்தை கடைபிடித்தது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்தும் போர் விமானங்களை மட்டும் டார்கெட் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால்தான் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
உத்தரவு வேறு மாதிரி இருந்திருந்தால் 10 முதல் 12 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்போம்" எனத் தெரிவித்தார்.இது தற்போது இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
We maintained restraint despite knowing about India attack Pakistani Minister Ishaq Dar