12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து...!
Edappadi Palaniswami congratulates students who have passed 12th standard
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ''எடப்பாடி பழனிசாமி'' தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி:
அதில் அவர் தெரிவித்ததாவது," 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்விக்கான விருப்பமிக்க, மற்றும் சரியான திசையைத் தேர்ந்தெடுத்து, வாழ்வின் அனைத்து படிகளிலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தேர்ச்சி பெறத் தவறியவர்கள் துவண்டுவிட வேண்டாம்.You haven't failed; Your success is just postponed for a while,
மீண்டும் நன்றாகப் புரிந்து படித்து, துணைத் தேர்வை அணுகுங்கள்; நிச்சயம் தேர்ச்சி அடைவீர்கள்!
நீங்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர்கள் தான்!
உங்களுக்கும் எனது Advance வாழ்த்துகள்! " என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு இணையத்தில் பலரும் ஆதரவு தந்து தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
English Summary
Edappadi Palaniswami congratulates students who have passed 12th standard