இந்தியா- ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் நடந்தால் பொருளாதார தடை விதிக்கப்படும்: அமெரிக்கா மிரட்டல்..! - Seithipunal
Seithipunal


ஈரான்- அமெரிக்க இடையே இன்னும் போர் நிறுத்தம் நடந்தபாடில்லை. இந்நிலையில், ஈரானுக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாக, பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்நிலையில், கிர்கிஸ்தானில் நடந்த 26 வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற்றது, இதில் இந்திய பிரதமர் மோடியும், ஈரான் அதிபர் பெஷெஷ்கியானும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஈரானுடன் ஒப்பந்தம் செய்தால் இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளதாவது;

''இந்தியா- ஈரான் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எந்த வித பேச்சுவார்த்தையும் நடப்பதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வெளியுறவு கொள்கை இருக்கும். பல நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடையை வேறு எந்த நாடுகளும் மீற கூடாது. அப்படி, மீறி ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும். இந்த விவகாரத்தில் டிரம்ப் மிகவும் தெளிவாக உள்ளார்.'' என்று குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US threatens to impose economic sanctions if India Iran trade deal is signed


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->