சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்...! - ஒருவர் பலி
Ukrainian drone attack car traveling road One person killed
உக்ரைன்–ரஷியா போர் 1,410வது நாளிலும் ஓய்வின்றி தொடர்கிறது. இந்த நீடித்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.

போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அரசியல், ராணுவ ஆதரவை வழங்கி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சித்தும், மோதல் நிறுத்தமின்றி தொடர்கிறது.
இந்த சூழலில், ரஷியாவின் எல்லையோர மாகாணமான பெல்ஹொராட் பகுதியில் இன்று சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.
திடீர் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் கடுமையாக காயமடைந்தனர்.இந்த தாக்குதல் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
English Summary
Ukrainian drone attack car traveling road One person killed