இலங்கை கடற்பரப்பில் போர் பதற்றம்: 101 பேர் மாயம்... ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!
US Submarine Sinks Iranian Vessel Near Sri Lanka 101 Sailors Missing
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் உக்கிரமான வான்வழித் தாக்குதலின் தாக்கம், தற்போது இந்தியப் பெருங்கடல் வரை பரவியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையிலான போர் தற்போது கடற்படை மோதலாக உருவெடுத்துள்ளது.
இன்றைய தாக்குதல் (மார்ச் 4):
இன்று புதன்கிழமை, இலங்கைக் கடல் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானின் 'ஐஆர்ஐஎஸ் டெனா' (IRIS Dena) எனும் போர்க்கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அதிரடியாகத் தாக்கியது.
பாதிப்புகள்:
மாயமானவர்கள்: கப்பலில் இருந்த 101 மாலுமிகள் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள்: 78 பேர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர்.
மீட்புப்பணி: இலங்கை கடற்படையினர் விரைந்து செயல்பட்டு 30 மாலுமிகளைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
டிரம்ப் அறிவிப்பும் பின்னணியும்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இதுவரை ஈரானின் 17 போர்க்கப்பல்களை அமெரிக்கப் படைகள் கடலில் மூழ்கடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில் ஒரு முக்கிய முரண் என்னவென்றால், தற்போது தகர்க்கப்பட்ட 'ஐஆர்ஐஎஸ் டெனா' கப்பல், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய கடற்படையின் சர்வதேசப் பயிற்சியில் (IFR) பங்கேற்க விசாகப்பட்டினம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வளைகுடா நாடுகளில் தொடங்கிய இந்தப் போர், தற்போது தெற்காசியக் கடல் எல்லைக்குள் நுழைந்திருப்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
US Submarine Sinks Iranian Vessel Near Sri Lanka 101 Sailors Missing