விமான பணிப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இங்கிலாந்து வாழ் பாகிஸ்தான் தொழிலதிபருக்கு 15 மாதம் சிறை: மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரின் முதல் மனைவி விவாதம்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானை சேர்ந்த, இங்கிலாந்தில் தொழிலதிபகவுள்ள சல்மான் இப்திகார், கடந்த ஆண்டு பிப்ரவரி 07-ஆம் தேதி லண்டனில் இருந்து லாகூர் சென்ற விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளதோடு, விமானப் பணிப்பெண் ஆங்கி வால்ஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், அவரை இனவெறியர் எனத் திட்டியதோடு, ரூமுக்குள் இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவதாக கொடூரமான முறையில் மிரட்டியுள்ளார். அத்துடன் அங்கு, சக ஆண் விமான ஊழியர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து காவல்துறை கடந்த மார்ச் 16-ஆம் தேதி சல்மானை கைது செய்தது. அவரிடம் ஐல்வொர்த் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மிரட்டல் சம்பவம் அடுத்து, விமான பணிப்பெண் ஆங்கி வால்ஷ் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு, 14 மாதங்கள் பணிக்குச் செல்ல முடியவில்லை என  நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்தார். இந்நிலையில், சல்மானின் மனைவியும், பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமுமான அபீர் ரிஸ்வி, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சில நாட்களில் தனது கணவருக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: மனநலம் என்பது நகைச்சுவையான விசயம் அல்ல, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு பின்னாலும் நீங்கள் காணாத வலி ஒன்று இருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன், புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது கணவரின் செயல்களுக்கு மனநல பாதிப்பே காரணம் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன், சல்மான் இப்திகாருக்கு இங்கிலாந்தில் வசிக்கும் எரும் சல்மான் என்ற மற்றொரு மனைவியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிக்கு அவரது மனைவி ஆதரவாகப் பேசுவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UK based Pakistani businessman who threatened flight attendant is mentally ill says first wife


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->