கயானா : பள்ளி விடுதியில் திடீர் தீ விபத்து - இருபது குழந்தைகள் பலி.!
twenty student died for fire accident in guyana
பள்ளி விடுதியில் திடீர் தீ விபத்து - இருபது குழந்தைகள் பலி.!
கயானா நாட்டில் உள்ள மஹ்டியா பகுதியில் பள்ளி விடுதி ஒன்றில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ சிறிது நேரத்தில் அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் பரவியது.
இதைப்பார்த்து மாணவர்கள் அலறி துடித்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அனால், அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தான் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் மீட்பு படையினர் விடுதிக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தத் தீ விபத்தில் சிக்கி சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
twenty student died for fire accident in guyana