காதலியை கொலை செய்து, கறிபோல சுட்டு வைத்த கொடூரம்.. வெளியான பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


துருக்கியில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பெண்மணி (Binner Gulettak) பின்னர் குலேட்டக் (வயது 27). இவர் கடந்த சில நாட்களாக மாயமாகியிருந்த நிலையில், அங்குள்ள மெண்டீஸ் பகுதியில் அவரது காதலரால் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து விசாரணை செய்கையில், 32 வயது செம்மல் மேடின் அவசி என்பவர் துண்டு துண்டான மாமிசங்களை எரித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட செம்மலின் சகோதரர் மெர்டகாசன் கெட்ட வாடை வருகிறது என்று கூறியுள்ளார். 

அது கெட்டுப்போன மாமிசம் என்று தனது சகோதரரிடம் கூறவே, அவரும் அமைதியாக சென்றுள்ளார். இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே பின்னர் குட்லெக் மாயமான தகவல் குறித்து விசாரணை செய்கையில், பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. செம்மல் மேடின் பின்னர் குலேட்டக்கின் காதலர் ஆவார்.  

இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில், கடந்த ஒரே மாதத்தில் 27 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதும், இதில் 23 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Turkey girl murder by love boy police investigation


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal