சுனாமி எச்சரிக்கை! கிரீஸ் நாட்டில் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவான நிலநடுக்கம்...!
Tsunami warning Earthquake measuring 6 Richter scale hits Greece
கிரீஸ் நாட்டில், இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இந்திய நேரப்படி காலை 8.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை, தேசிய நில அதிர்வு மையம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது.

மேலும், இது 104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 35.96°வடக்கு அட்சரேகையிலும், 25.79° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சூழலில், கிரீசில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்நாட்டுக்கு ''சுனாமி எச்சரிக்கை'' விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Tsunami warning Earthquake measuring 6 Richter scale hits Greece