அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப்..!
Trump warns Russia that US is ready for nuclear war
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து, உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இது தொடர்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் டிரம்புக்கும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மெட்விதேவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு தொடங்கிய நிலையில், இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோபமடைந்துள்ளார். மேலும், அணு ஆயுத தாக்குதல் நடத்தும் 02 நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
-xbufv.png)
இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மேலும் கூறியதாவது: ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராகயுள்ளது என்றும், அணு ஆயுத தாக்குதல் நடத்தும் 02 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப வேண்டி இருந்தது. நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது, அது பொருத்தமானது என்று நினைக்கவில்லை என்றும் எனவே நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், நமது மக்களின் பாதுகாப்பிற்காக நான் இதைச் செய்கிறேன் என்றும், நீங்கள் அணுசக்தி பற்றிப் பேசும் போது, நீங்கள் தயாராக இருக்க வேண்டும எனவும், நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
English Summary
Trump warns Russia that US is ready for nuclear war