எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! தென்கொரியா, ஜப்பான் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும்!
Trump warns of 25percentage tariffs on South Korean and Japanese goods
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள்,"ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து, ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த நடவரிக்கையானது ஜப்பான், மியான்மர், லாவோஸ், வங்கதேசம், செர்பியா,தென்னாப்பிரிக்கா,தென்கொரியா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.
அதில் முக்கிய குறிப்பாக ஜப்பான், தென்கொரியப் பொருட்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் என அந்நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.அதுமட்டுமின்றி,புதிய வரிவிதிப்பு குறித்து 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை டிரம்ப் வெளியிட்டார்.
அதில், 'நாங்கள் உயர்த்திய வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் தங்கள் சொந்த இறக்குமதி வரிகளை உயர்த்தினால், அமெரிக்க அரசு இன்னும் வரிகளை உயர்த்தும்' என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும்,அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trump warns of 25percentage tariffs on South Korean and Japanese goods