வந்துருவேன் னு சொல்லு.. சீக்கிரம் வந்துருவேன்னு சொல்லு.. ட்ரம்ப் அதிரடி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெளனியா ட்ரம்பிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில், இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ட்ரம்ப் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

மெளனியா ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இராணுவ மருத்துவமனையில் இருக்கும் ட்ரம்பின் உடல்நிலையை தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும், வரும் 48 மணிநேரம் மிகவும் முக்கியமானது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். 

ட்ரம்பின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், இது குறித்து அவர் பதிவு செய்துள்ள ட்விட்டரில், இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், " நான் விரைவில் மீண்டு வருவேன். நான் துவங்கிய பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற வேண்டிய கடமை உள்ளது. கொரோனா வைரஸை நாம் கட்டாயம் வீழ்த்துவோம் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trump Says about Coming soon Relieve


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal