ஆள் செம ஸ்டைல்... டார்கெட் எல்லாம் சொகுசு ஹோட்டல்கள்...! 30 வருட நூதன திருட்டு மன்னனை தட்டித்தூக்கிய ஒடிசா காவலர்கள்...!
man great style target all luxury hotels Odisha police nab 30 year old mastermind new theft
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் முன்னணி ஐந்து நட்சத்திர ஆடம்பர ஓட்டல்களை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக திட்டமிட்டு ஏமாற்றி வந்ததாகக் கூறப்படும் தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர், ஒடிசா மாநிலத்தில் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஓட்டல் நிர்வாகங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த வின்சென்ட் ஜான் (69), கடந்த 1980-களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் ஒரு ஆடம்பர ஓட்டலில் ஏற்பட்ட அவமானத்தை மனதில் வைத்து, அதற்கு பழிவாங்கும் நோக்கில் 1996-ஆம் ஆண்டு முதல் ஆடம்பர ஓட்டல்களை குறிவைத்து ஏமாற்றும் செயல்களில் ஈடுபடத் தொடங்கியதாக விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
கண்ணியமான தோற்றம், சரளமான ஆங்கிலப் பேச்சுத்திறன் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடத்தை ஆகியவற்றை பயன்படுத்தி, யோகா பயிற்சியாளர், ஆங்கில ஆசிரியர் அல்லது சுற்றுலா வழிகாட்டி என தன்னை அறிமுகப்படுத்தி ஓட்டல் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம், கோவா, மகாராட்டிரம், ஜார்கண்ட், தெலங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஆடம்பர ஓட்டல்களில் இதே பாணியில் மோசடி நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஓட்டல்களில் அறை முன்பதிவு செய்யும்போது இரண்டு பைகளுடன் வருவது அவரது வழக்கமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு பையில் உடைகளை வைத்திருந்த அவர், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்கள் அல்லது தலையணைகளை நிரப்பி அறையிலேயே விட்டுச் செல்வார்.
இதனால் அவர் இன்னும் அறையில் இருப்பதாக ஊழியர்கள் கருதும் நிலையில், மற்றொரு பையில் அறையில் இருந்த மடிக்கணினிகள், உயர்மதிப்புள்ள வெளிநாட்டு மதுபானங்கள், புகைப்பொருட்கள் உள்ளிட்ட விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு எவருக்கும் சந்தேகம் ஏற்படாமல் வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஆடம்பர ஓட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த வின்சென்ட் ஜான், ஓட்டல் ஊழியரை ஏமாற்றி ரூ.1.48 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினியை பெற்றுக்கொண்டதுடன், ரூ.63 ஆயிரத்து 755 மதிப்பிலான தங்கும் கட்டணத்தையும் செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், கண்காணிப்பு ஒளிப்பதிவுகளை ஆய்வு செய்த காவலர்கள், ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் வைத்து அவரை கைது செய்தனர்.
மேலும் நடைபெற்ற விசாரணையில், டெல்லி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வின்சென்ட் ஜான் மீது ஏமாற்று வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இதற்கு முன்பும் பலமுறை காவலர்களிடம் சிக்கியிருந்த போதிலும், தொடர்ந்து இதேபோன்ற மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
man great style target all luxury hotels Odisha police nab 30 year old mastermind new theft