இன்னும் ஆட்டமே முடில தம்பி., அதுக்குள்ள ஆட்டமா.! பீதியை கிளப்பும் டிரம்ப்.!! - Seithipunal
Seithipunal


குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் பல்வேறு மாகாணங்களில் இழுபறி நீடித்து வந்த நிலையில், ஒரு வழியாக பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள 20 தேர்தல் வாக்குகளையும், நெவாடா மாகாணத்தில் 6 வாக்குகளையும் ஜோ பைடன் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதனையடுத்து 290 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்தன. அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், தேர்தல் முடிவடைய இன்னும் நிறைய காலம் உள்ளது என்று டிரம்ப் பிரசார குழு தெரிவித்துள்ளது. டிரம்பின் பிரசார குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, 

"ஊடகங்களால் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறாக சித்தரிக்கப்படுகிறது. பைடனின் ஆதரவு மீடியாக்கள் உண்மையை மறைத்து செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவடைய நிறைய காலம் உள்ளது என்பதுதான் உண்மை.

அமெரிக்காவின் எந்த ஒரு மாகாணத்திலும் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கவில்லை. தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்கள் சட்ட போராட்டம் இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது.

நாளை முதல் வழக்குகளைத் தொடர்ந்து சரியான வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க உள்ளோம். அமெரிக்க மக்கள் ஒரு நேர்மையான தேர்தலுக்கு தகுதியானவர்கள். இதுதான் நமது தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு காரணமாக அமையும்" என்று டிரம்பின் பிரசார குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trump not accept joe Biden victory


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->