சீனாவில் புல்லெட் ரயில் தடம் புரண்ட விபத்தில் ரயில் ஓட்டுனர் உயிரிழப்பு.! 7 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சீனாவில் புல்லட் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் ரயில் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவில் தென்கிழக்கு மாகாணமான கின்யாங்கில் இருந்து 136 பயணிகளுடன் கன்ங்சொவ் நகருக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரோங்க்ஜீகங் பகுதியில் உள்ள சுரங்கப் பாதையில் ரயில் சென்றபோது இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ரயில் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து மண்சரிவு ஏற்பட்டதை அறிந்து அவசரகால பிரேக்கை ரயில் ஓட்டுனர் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Train derailment accident in China


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->