கொலம்பியாவில் பயங்கர நிலச்சரிவு.! மூன்று சிறுவர்கள் உட்பட 33 பலி - Seithipunal
Seithipunal


கொலம்பியாவில் நிலச்சரிவில் பேருந்து மற்றும் பிற வாகனங்கள் புதைந்ததில் மூன்று சிறுவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளதாக கொலம்பியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் பொகோட்டாவிற்கு வடமேற்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரிசரால்டா மாகாணத்தின் பியூப்லோ ரிக்கோ மற்றும் சாண்டா சிசிலியா கிராமங்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் பயணிகள் பேருந்து மற்றும் பிற வாகனங்களும் புதைந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர நிலசரியில் சிக்கி மூன்று சிறார்கள் உட்பட 33 பேர் உயிரிழந்து உள்ளனர். 9 பேரை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று உள்துறை அமைச்சர் அல்போன்சோ பிராடா தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு இருக்கலாம் என்பதால் மீட்பு குழுவோடு அந்நாட்டு ராணுவமும் இணைந்து மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் அரசாங்கம் துணைநிற்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three childrens including 33 killed in landslide in Colombia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->