நைஜீரியா : ரெயில் நிலையத்தில் 32 பயணிகள் கடத்தல்.!  - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா மற்றும் போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. 

இதேபோன்று, கொள்ளை, கொலை மற்றும் பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் கால்நடைகள் போன்றவற்றை கடத்தும் 'பண்டிட்ஸ்' என்ற கும்பல்களும் செயல்படுகிறது. 

அவ்வப்போது இந்த அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், இந்த அமைப்புகள் மீதும் நைஜீரியா பாதுகாப்பு படைகள் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், நைஜீரியாவில் உள்ள இடோ மாகாணத்தில் டாம் இகிமி ரெயில் நிலையம் உள்ளது. இங்கு, நேற்று துப்பாக்கியுடன் புகுந்த ஒரு நபர் அங்கு ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். 

இதில், பலர் படுகாயமடைந்த நிலையில், ரெயில் நிலையத்தில் இருந்த 32 பயணிகளை பிணைக்கைதியாக அந்த நபர் கடத்தி சென்றார். இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பயணிகளை கடத்தி சென்ற நபரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும், பிணைகைதிகளாக கடத்தப்பட்ட பயணிகளையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்தில் பயணிகளை கடத்தி சென்றது பயங்கரவாதியா? என்ற கோணத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thirty two passangers kidnape in naigeria railway station


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->