மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக 32 லட்சம் பணமோசடி.!! - Seithipunal
Seithipunal


மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக 32 லட்சம் பணமோசடி.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கல்பாதேவி பகுதியில் புகழ் பெற்ற மும்பா தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜெய்கோபால். இவருக்கு கடந்த 1995-ம் ஆண்டு முதல் காலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜெய்கோபால் கடந்த 2017-ம் ஆண்டு தன் மகள் ரேடியாலஜி படித்துள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் வேலை வாங்கி தரும்படி காலாவிடம் தெரிவித்து இருந்தார். இதனை அவர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பரேலில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.38 லட்சம் பெற்று உள்ளார். 

ஆனால், அவர் சொன்னபடி ஜெய்கோபாலின் மகளுக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் ஜெய்கோபால் தனது பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார். உடனே காலா ரூ.6 லட்சத்தை மட்டும் திருப்பி வழங்கி விட்டு மீதியுள்ள ரூ. 32 லட்சம் பணத்தைத் திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். 

இது தொடர்பாக ஜெய்கோபால் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் காலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirty two lakhs money fraud for job buy in hospital


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->