ரஷ்யாவில் பரிதாபம் - பெட்ரோல் பங்கில் வெடி விபத்து - 35 பேர் பலி.!
thirty five peoples died for fire accident in russia petrol bunk
ரஷ்யாவில் பரிதாபம் - பெட்ரோல் பங்கில் வெடி விபத்து - 35 பேர் பலி.!
ரஷியா நாட்டிலுள்ள தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாணத்தின் தலைநகர் மக்ஹச்கலாவில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
முதலில் இந்த பெட்ரோல் நிலையம் அருகே இருந்த கார் பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ வேகமாக பெட்ரோல் பங்க் மீது பரவியது.

இதன் காரணமாக, பெட்ரோல் பங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட முப்பத்தைந்து பேர் உயிரிழந்தனர். மேலும், 115 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
thirty five peoples died for fire accident in russia petrol bunk