முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு: ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரனை இந்தியாவுக்கு நாடுகடத்தியுள்ள அமெரிக்கா..! - Seithipunal
Seithipunal


கடந்த 2024-ஆம் ஆண்டு அக்., மாதம் மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அன்மோல் பிஷ்னோய் என்பவன், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளான். 

பாபா சித்திக் கொலை சம்பவத்தில், பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொலை சம்பவத்திலும் ,2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் இவனுக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

அவனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், அவனை போலீசார் தேடிவந்தனர். இதனையடுத்து அன்மோல் பிஷ்னோயை கைது செய்யும்படி ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாக அன்மோல் பிஷ்னோய் கைது செய்யப்பட்டான். அதனை தொடர்ந்து அவனை நாடு கடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அமெரிக்க அதிகாரிகள் அவனை அங்கிருந்து நாடு கடத்தியுள்ளனர்.

நாளை (நவம்பர் 19) இந்தியா வந்தடைவான் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்மோன் பிஷ்னோய் நாடு கடத்தப்படுவது குறித்த தகவலை, பாபா சித்திக்கின் மகனுக்கு அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The US has extradited the brother of rowdy Lawrence Bishnoi to India in the murder case of former minister Baba Siddique


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->