'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்': சுந்தர் பிச்சை எச்சரிக்கை..!
Sundar Pichai warns against blindly trusting artificial intelligence technology
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் எனவும், அது பிழை செய்ய வாய்ப்புள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தை சந்தேகத்துடன் அணுக வேண்டும். கூகுளின் ஜெமினி போன்ற அதிநவீன மென்பொருள் கூட தவறுகளைச் செய்யக்கூடும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அது பிழை செய்ய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முடிந்தவரை துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக, நாங்கள் மேற்கொள்ளும் பணி பற்றி பெருமைப்படுகிறோம் என்றும், ஆனால் தற்போதைய அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் சில பிழைகளுக்கு ஆளாகிறதாகவும், மக்கள் இதனை சிறந்தவர்களாக இருப்பதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் ஏஐ சொல்லும் அனைத்தையும் குருட்டுத்தனமாக நம்பக்கூடாது என்றும், பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும் என்றும், இதனை கவனமுடன் கையாள வேண்டும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
English Summary
Sundar Pichai warns against blindly trusting artificial intelligence technology