எக்ஸ் சமூக வலைதளம், சாட் சாட் ஜிபிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை முடக்கம்: நெட்டிசன்கள் கவலை..!
X social networking site and CHATgpts Open AI and other things are blocked
கிளவுட்பிளேரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் சாட் சிஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை இன்று மாலை முதல் முடங்கின. வலை உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இவை முடங்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த முடக்கம் காரணமாக இது குறித்து நெட்டிசன்கள் கவலை தெரிவித்துள்ளனர். முதலில் சிறிதுநேரம் சீரடைந்த எக்ஸ் வலைதளம் மீண்டும் செயலிழந்தது.
இதனால், எக்ஸ் வலைதளத்தில் எந்தத் தகவலையும் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என நெட்டிசன்கள் தெரிவத்துள்ளனர். இது தொடர்பாக கிளவுப்பிளேர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை அறிந்துள்ளோம். அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கிளவுட்பேர் டேஷ்போர்டு மற்றும் ஏபிஐ ஆகியவை தோல்வியடைந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை புரிந்து கொண்டு சிக்கலை தணிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். எனத் தெரிவித்துள்ளது.

பிறகு, நிலைமை படிப்படியாக சீரடைந்துவருவதாக அந்தநிறுவனம் தெரிவித்து இருந்தது. கிளவுப் பிளேர் பிரச்சினை காரணமாக,
எக்ஸ் சமூக வலைதளம்
ஸ்பாட்டிபை
கான்வா
ஷேஃபி
ஓபன் ஏஐ
கார்மின்
வெரிசோன்
டிமொபைல்
டிஸ்கோர்ட்(ஆன்லைன் கேமிங்)
லீக் ஆப் லெஜன்ட்ஸ் (ஆன்லைன் கேமிங்) உள்ளிட்டவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
X social networking site and CHATgpts Open AI and other things are blocked