கோவை வேளாண் மாநாட்டிற்கு வருகை தருவது குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவு..!
Prime Minister Modi posts in Tamil about his visit to the Coimbatore Agriculture Conference
ஆந்திரா மற்றும் தமிழகத்திற்கு நாளையத்தினம் (நவம்பர் 19) பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். இதற்காக காலை 10 மணியளவில், பிரதமர் ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் புனித ஆலயம் மற்றும் மகாசமாதிக்குச் சென்று, மரியாதை செலுத்தஉள்ளதோடு, காலை 10:30 மணியளவில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகளை கவுரவிக்கும் வகையில் ஒரு நினைவு நாணயம் மற்றும் தபால் தலைகளின் தொகுப்பையும் வெளியிடவுள்ளனர். அத்துடன், அந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றவுள்ளார்.
அதன்பிறகு, பிரதமர் மோடி கோவைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு மதியம் 01:30 மணியளவில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டை தொடங்கி வைப்பதோடு, நாடு முழுவதும் உள்ள 09 கோடி விவசாயிகளுக்கு பிஎம்-கிசான் திட்டத்தின் 21-வது தவணையை பிரதமர் வெளியிடவுள்ளார். பின்னர் நிகழ்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

இது குறித்து அவர் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
''தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோவை செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.
நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்.''என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
English Summary
Prime Minister Modi posts in Tamil about his visit to the Coimbatore Agriculture Conference