பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள திமுக மாவட்ட செயலாளர்; நடவடிக்கை எடுக்காத கட்சி தலைமை..? வேடிக்கை பார்க்கும் தமிழக போலீஸ்..! - Seithipunal
Seithipunal


நாட்டின் பிரதமர் நேரேந்திர மோடிக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த தென்காசி மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயபாலன் சமீபத்தில் நடந்த கட்சி ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் மோடியை மிக மோசமாக ஒருமையில் விமர்சித்தார். அத்துடன், கொலை மிரட்டல் விடுவது போலவும் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதாவது, மோடி இன்னொரு நரகாசுரன் என்றும், அவரை தீர்த்து கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்றும் ஜெயபாலன் பகிரங்கமாக மேடையில் நின்று மைக்பிடித்து பேசியமை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோவாக பரவி வருகிறது.

திமுக கட்சியின் மாவட்ட செயலாளர் நாட்டின் பிரதமரை தீர்த்துக் கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்று பேசுவது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அவரது இந்த பேச்சுக்கு திமுக தலைமை இதுவரை எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, சம்பவ இடத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு நாட்டின் பிரதமை ஒருமையில் பேசியதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜெயபாலன் மீது திமுக கட்சி தலைமையும் தமிழக போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோவை பார்த்த  அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The party leadership did not take action against the DMK district secretary who threatened to kill Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->