"ரோபோடா.... ரோபோடா..." காவல் துறையில் பாதுகாப்புக்கு டிஜிட்டல் நாய்கள் வந்தாச்சு! ஆச்சர்யத்தில் மக்கள்! - Seithipunal
Seithipunal


தகவல் தொழில் நுட்ப வசதிகளையும் நவீன அறிவியலையும் காவல்துறை மற்றும் ராணுவம் போன்ற பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதில் அமெரிக்கா தான் உலகில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரோபோ நாய்கள்  நியூயார்க் காவல்துறையில் இணைந்து பணியாற்ற உள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த டிஜி டாக் என அழைக்கப்படும் ரோபோ நாய்கள் காவல்துறையில் இணைந்து பணியாற்ற உள்ளன. இந்த நாய்கள் பல்வேறு தகவல் தொழில் நுட்ப வசதிகளுடன் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடனும் இயங்க இருக்கிறது.

மேலும் இந்த நாய்கள் கண்காணிப்பு பணிக்கு உதவும் வகையிலும் ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார் பார்க்கிங், சுரங்கப்பாதைகள், கட்டுமான பகுதிகள் மற்றும் ஆபத்தான இடங்களில் இந்த ரோபோ நாய்கள் கண்காணிப்பிற்கு விடப்படும்.

மேலும் தப்பிச்செல்லும் கார்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் வசதியும் இந்த டிஜி டாக்கில் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எல்லா இடங்களிலும் காவலர்களே இருக்க வேண்டிய அவசியம் தற்போது இருக்காது. இந்த ரோபோ நாய்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்கும் வகையில்  காவல்துறையில் பணியமர்த்தப்பட உள்ளதாக நியூயார்க் நகர காவல் துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The digital dogs to be introduced in the police force are a pinnacle of technological development


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->