18 மணி நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் தாக்கும் அதிரடி படை தயார்...! - அமெரிக்கா - Seithipunal
Seithipunal


மேற்காசியாவில் பதற்றம் உச்சிக்குச் சென்றுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள், உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் பற்றாக்குறை கவலை அதிகரித்துள்ளது.இந்த நெருக்கடியை சமாளிக்க, அமெரிக்கா தனது கடற்படை அணிகளை வளைகுடா பிராந்தியத்துக்கு நகர்த்தி, சுமார் 4,500 வீரர்களை களமிறக்கியுள்ளது.

அதே நேரத்தில், நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க, டொனால்ட் டிரம்ப் தலைமையில் புதிய ராஜதந்திர முயற்சிகளும் பரிசீலனையில் உள்ளன.

இந்நிலையில், ராணுவ தயார் நிலையை அதிகரிக்கும் வகையில், பென்டகன் கூடுதல் படைகளை அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 82வது விமானப் படையைச் சேர்ந்த சுமார் 2,000 வீரர்கள் மேற்காசியாவுக்கு விரைவாக அனுப்பப்படுகின்றனர்.

18 மணி நேரத்திற்குள் உலகின் எந்தப் பகுதியையும் அடையக்கூடிய அதிவேக திறன் கொண்ட இந்த படை, சுமார் 3,000 வீரர்கள் கொண்ட அதிரடி படைப்பிரிவின் ஒரு பகுதியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

task force ready attack anywhere 18 hours America


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->