03 ஆண்டுகளை கடந்துள்ள ரஷியா- உக்ரைன் போர் முடிவு..? ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று பேச்சுவார்த்தை..! - Seithipunal
Seithipunal


உக்ரைன் -ரஷியா இடையேயான போர், 03 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துள்ளனர். 

இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்தார். 

குறித்த, நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது உக்ரைன், ரஷியா மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஜனவரி 23 நடைபெறுகிறது. அதாவது, சுவிட்சர்லாந்தில் டிரம்பை சந்தித்த பிறகு பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Talks on a Russia and Ukraine ceasefire are being held today in the United Arab Emirates


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->