அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோவின் சொத்துக்கள் முடக்கம்: சுவிட்சர்லாந்து அறிவிப்பு..!
Switzerland has announced that all of Nicolas Maduros assets have been frozen
அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி சிலியா புளோரஸ் இருவரும் சிறை பிடிக்கப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. வடகொரியா மற்றும் சீனா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்கியுள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சுவிட்சர்லாந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, '' நிக்கோலஸ் மதுரோ அல்லது அவருடன் தொடர்புள்ளவர்கள் சுவிட்சர்லாந்தில் வைத்திருக்கும் எந்தவொரு சொத்தையும் உடனடியாக முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து முடக்கம் உடனடியாக இன்று முதல் முடக்கத்துக்கு வந்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு 04 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
ஏதேனும் சொத்துகள் சட்ட விரோதமானவை என்று தெரிய வந்தால், அவை வெனிசுலா மக்களுக்கு பயன்படும் வகையில், சுவிட்சர்லாந்து அரசு தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யும்.
தற்போதுள்ள சூழ்நிலையில், சட்ட விரோதமாக சம்பாதித்த எந்தவொரு சொத்தையும், சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியே மாற்ற முடியாது என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புகிறோம்.'' என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Switzerland has announced that all of Nicolas Maduros assets have been frozen