கோவை சரவணம்பட்டியில் போதை ஸ்டாம்பு கும்பல் சிக்கியது...! - 5 பேர் கைது
drug stamp gang caught Saravanampatti Coimbatore 5 people arrested
கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்ற இரவு ரோந்து நடவடிக்கையில், போலீசாரின் கூர்மையான கண்காணிப்பில் சந்தேகமாக நடமாடிய மூன்று இளைஞர்கள் சிக்கினர்.
அவர்களை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது, கணபதி பகுதியைச் சேர்ந்த ரேவந்த் (எ) அபி (23), ரத்தினபுரியைச் சேர்ந்த பெலிக்ஸ் பிரதீப் (25) மற்றும் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரதீஷ் (20) என்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்த விசாரணையில், இவர்கள் பெங்களூரிலிருந்து போதைப் பொருள் ஸ்டாம்புகளை சட்டவிரோதமாக கடத்தி வந்து, கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் மூவரையும் கைது செய்து, தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிடைத்த துப்பின் பேரில், வர்ஷத்குமார் (22) மற்றும் ஹரிபிரசாத் (21) ஆகிய மேலும் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையால், கோவையில் வேரூன்றியிருந்த போதைப் பொருள் விநியோக வலையமைப்புக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary
drug stamp gang caught Saravanampatti Coimbatore 5 people arrested