ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் டோக்கியோவில் இருந்து 107 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே மாலை 3.33 மணியளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் பூமிக்கு அடியில் 65 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இதற்கு முன்பாக மத்திய ஜப்பானில் கடந்த மே 5ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Strong Earthquake of 6 point 1 Magnitude hits japan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->