புதிய காதலனுடன் கல்யாணம்.. Ex பாய்பிரண்டுடன் ஹனிமூன்.. கலவரப்படுத்திய இளம்பெண்.!
Sri Lankan Women Met with Her Ex To get Permission for Her new marriage
23 வயது இளம் பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு பழைய காதலனிடம் அனுமதி பெற சென்று மூன்று நாட்கள் அவருடன் தங்கி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஒரு 23 வயது இளம் பெண்ணின் தாய் காவல் நிலையத்திற்கு சென்று தனது மகளை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி அந்த 23 வயது இளம்பெண் சில காலங்களுக்கு முன்பு ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின் அந்தப் பெண்ணுக்கு 27 வயது இளைஞர் ஒருவருடன் மீண்டும் காதல் ஏற்பட்டது.
அந்த இளைஞருடனான திருமணத்திற்கு வீட்டினர் சம்மதித்த நிலையில் அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். போலீசாரின் விசாரணை படி தனது பழைய காதலனிடம் புதிய காதலனுடனான திருமணத்திற்கு அனுமதி கேட்டு தனது பழைய காதலனுடன் அவர் மூன்று நாட்கள் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Sri Lankan Women Met with Her Ex To get Permission for Her new marriage