இப்போது., வீடு வாங்கும் விலையில்.. ஒரு கிராமத்தையே வாங்கலாம்.!  - Seithipunal
Seithipunal


ஸ்பெயின் நாட்டில் வெறும் 44 வீடுகளை மட்டும் கொண்ட ஒரு கிராமத்தை வாங்குவதற்கு நான், நீ என்று சமூக வலைதளங்களில் பலரும் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் Salto de Castro எனும் கிராமம் மிகவும் பழமையான ஒரு கிராமம் ஆகும்.

இந்த கிராமமானது மாட்ரிட் நகருக்கு அருகில் அமைந்து இருக்கின்றது. இதில், கடந்த 30 வருடங்களாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்து வருகின்றது. மக்களால், கைவிடப்பட்ட இந்த Salto de Castro கிராமம், தற்பொழுது பாழடைந்து வாழவே தகுதியில்லாத ஒரு இடமாக காட்சியளிக்கின்றது. 

இந்த Salto de Castro கிராமத்தை கடந்த 2000களில் புதுப்பித்து சுற்றுலா தளமாக்க நினைத்து,  தொழிலதிபர் ஒருவர் வாங்கி இருக்கின்றார். இருப்பினும், அவருடைய முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை. தற்போது அவருக்கு 80 வயதாகிவிட்டது.

வேறு வழியேயில்லாமல், இந்த கிராமத்தை தற்போது இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு விற்க முன் வந்து இருக்கின்றார். மாட்ரிட் மற்றும் பார்சிலோனா நகரில் ஒரு பெட் ரூம் அடங்கிய அப்பாட்மெண்ட்டின் விலை 2 கோடி கோடிகளுக்கு விற்கப்படும். இந்த நிலையில், வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரும் இந்த கிராமத்தினை வாங்க தற்போது கடுமையாக போட்டியிட்டு கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spain Village for 2 crores


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->