திருமணம் பண்ணாமலே குழந்தை பெத்துக்கலாம்.. ஊதியத்துடன் விடுமுறை.. எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


கடந்த 2019ம் ஆண்டு கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கத்தின் காரணமாக 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் மக்கள் தொகை சரிந்துள்ளது. மேலும், சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

இதனையடுத்து சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட மக்கள் தொகையை பெருக்க அந்நாட்டின் அரசாங்கம் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சீனாவில் ஏற்கனவே அமலில் உள்ள ஒரு தம்பதியினருக்கு, ஒரு குழந்தை என்ற திட்டம் தளர்த்தப்பட்டு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது.

அந்த வகையில் தனியாக இருக்கும் பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சீன அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் திருமணமாகாத பெண்கள் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை எடுத்துக்கொண்டு செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாடகைத்தாய் மூலம் விருப்பமுள்ள பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என அவர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Single women get baby allowed in China


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal