69 சிறுமிகளின் ஆபாசப்படம்.. 3 ஆண்டுகளாக ஆசிரியரின் கேவலமான வேலை.! கையும், களவுமாக பிடிபட்ட காமுகன்.!  - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் 47 வயது ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதுபோல 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளாக 168 ஆபாச வீடியோக்களை எடுத்துள்ளார். 

இதில் மொத்தம் 69 சிறுமிகளை அந்த ஆசிரியர் படம் பிடித்து தன்னுடைய மொபைலில் வைத்து இருந்துள்ளார். தனது பள்ளியில் படிக்கும் சிறுமிகளை மட்டுமல்லாமல் தன்னுடைய உறவினர் பெண் ஒருவரையும் அது போல ஆபாசமாக படம் பிடித்து வைத்துள்ளார். 

மேலும் மாலில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணையும் மிகவும் மோசமாக படம் பிடித்து வைத்துள்ளார். இந்த வழக்கானது ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது. 

இதுகுறித்து கல்வி குழும செய்தி தொடர்பாளர் ஒருவர், " அவர் இனி எந்த பள்ளியிலும் ஆசிரியராக பணிபுரிய முடியாது. 2018 ஆம் ஆண்டு முதல் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரின் குற்றம் நிரூபிக்கப்படுமானால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Singapore teacher capturing video about students 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->