பொதுமக்கள் கவனத்திற்கு: மின்தடை புகார்களைத் தெரிவிக்க சிறப்பு எண்கள் அறிவிப்பு...! - மின்வாரியம் அதிரடி...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் மின்விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாத வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"மாநிலம் முழுவதும் பொதுமக்களின் மின்தேவையை பூர்த்தி செய்து, சீரான மின்விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மின்பற்றாக்குறை ஏற்படாத சூழல் உருவாக்கப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.மாநிலத்தின் மின்தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் 24 மணி நேரமும் விழிப்புடன் செயல்பட்டு, மின்விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் கண்காணித்து வருகின்றனர். தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உரிய உத்தரவுகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மின்விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்து, பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும் பணியில் அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மின்சாரத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.இதற்காக 94987 94987 என்ற தொலைபேசி எண்ணில் மின் நுகர்வோரும் பொதுமக்களும் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்குமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Announcement special numbers report power outage complaints Electricity Board takes action


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->