விநாயகர் சதுர்த்தி 2026: கணபதி ஹோமம் மற்றும் விநாயகர் பிரதிஷ்டை செய்ய உகந்த சுப முகூர்த்த நேரங்கள்!
Vinayagar Chaturthi 2026 nalla neram Auspicious Timings for Idol Consecration Ganapathi Homam and Worship Announced
இந்து சமயத்தின் மிக முக்கியப் பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி திதியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிகழும் ஸ்ரீபராபவ வருடம், ஆவணி மாதம் 28-ஆம் நாள் (செப்டம்பர் 14, 2026 - திங்கள்கிழமை) அன்று இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட உகந்த திருநாளாகச் சாஸ்திர ரீதியாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழு மனதோடு விரதமிருந்து பூஜித்து, அருகில் உள்ள திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் சகல நன்மைகளும் காரிய சித்திகளும் கைக்கூடும் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம் மற்றும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்வதற்குரிய சுப முகூர்த்த நேரங்களின் விவரம்:
கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம்: செப்டம்பர் 13, 2026 (ஞாயிற்றுக்கிழமை): காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை.
கணபதி ஹோமம் செய்ய உகந்த நேரம் (செப்டம்பர் 14, திங்கள்கிழமை):
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
விநாயகர் பிரதிஷ்டை மற்றும் பூஜை செய்ய உகந்த நேரம் (செப்டம்பர் 14, திங்கள்கிழமை):
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
பிற்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
மேலும், விநாயகர் சதுர்த்தி நாளன்று ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்களில் பொதுமக்கள் பங்கேற்று அருள் பெறலாம். கோயில்களில் நடத்தப்படும் கணபதி ஹோமத்திற்குப் பலன் தரும் கொப்பரைத் தேங்காய் மற்றும் சத்துமாவு ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வழிபடுவது குடும்பத்திற்கு மிகுந்த நன்மையையும் சுபிட்சத்தையும் அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Vinayagar Chaturthi 2026 nalla neram Auspicious Timings for Idol Consecration Ganapathi Homam and Worship Announced