அதிர்ச்சி தகவல்! எரிமலை பள்ளத்தில் தவறி விழுந்து இறந்த பிரேசில் பெண்...! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டை சேர்ந்தவர் 26 வயதான 'ஜூலியானா மரின்ஸ்' என்ற பெண்.இவர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி, ஒரு குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியாவின் ரிஞ்சனி எரிமலையில் மலையேற்றம் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ஜூலியானா மரின்ஸ் அங்குள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.இந்த தகவலறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும், டிரோன் மூலம் ஜூலியானா மரின்ஸ் உயிருடன் இருப்பதை கண்டறிந்த மீட்புப்படையினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

இருப்பினும், அவரை உயிருடன் மீட்கமுடியவில்லை. இதில் ஜூன் 24 ஆம் தேதி நேற்று ஜூலியானா மரின்ஸ் சடலத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இந்தோனேசியா எரிமலையில் சிக்கி பிரேசில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking news Brazilian woman dies after falling into volcanic crater


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->