ஆசிய கோப்பை 2025: இந்திய அணி நாளை அறிவிப்பு: பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தும் என ஆகிப் ஜாவேத் சவால்..! 
                                    
                                    
                                   Indias squad for Asia Cup 2025 to be announced tomorrow
 
                                 
                               
                                
                                      
                                            ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டெம்பர் 09 ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. டி.20 வடிவில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 08 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெறவுள்ளது.
இதில் இரு பிரிவிலும் 02 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அத்துடன், இந்த சுற்றில் முதல் 02 இடம் பிடிக்கும் அணிகள் 28 ஆம்-தேதி இறுதி[போட்டியில் மோதும். இதில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா வரும் 10-ஆம் தேதி யுஏஇ அணியுடனும், 14-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், 19-ஆம் தேதி ஓமனுடன் மோத உள்ளது. 

இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி அணியை தேர்வு செய்ய உள்ளனர். இந்த கூட்டத்தின் போது டி.20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த தொடரில் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கிலுக்கு வாய்ப்பு கிடைக்குமா..? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அவருக்கு போட்டியாக ஜெய்ஸ்வாலும் அடுத்து உள்ளார். இதற்கிடையே ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய ஸ்ரேயாஸ் அய்யருக்கு 02 ஆண்டுக்கு பின் மீண்டும் அணியில் வாய்ய்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் மாற்றாக ஜிதேஷ் சர்மா இடம் பெறுவார் என்றும், ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்காது எனவும் கூறப்படுகிறது. இத தொடரில் பும்ரா ஆட விரும்புவதால் முகமது சிராஜிக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த சூழல் சக்கரவர்த்தி வருண் சக்கரவர்த்திக்கு, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என் ஏதிர்பார்க்கப்படுகிறது.
அணியில் தற்போது தரமான வீரர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதிலிருந்து 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது தேர்வு என்பது குழுவினருக்கு பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த வீரர்களான முகமது ரிஸ்வான், பாபர் அசாமுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும், அணி தேர்வுக்கு பின் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளர் ஆகிப் ஜாவேத் கூறுகையில், இந்த அணிக்கு ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் திறன் உள்ளது என்று சவால் விடுத்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Indias squad for Asia Cup 2025 to be announced tomorrow