பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.! அரசின் அதிரடி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரசின் தாக்கம் சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2 ஆயிரத்து நெருங்கி இருக்கின்றது. 

நேற்று மட்டும் ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால், இறந்து இருக்கின்றன. 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஷாங்காய் நகரில் நடைபெற இருந்த சர்வதேச கால்பந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டு விட்டது. மேலும், சீனாவில் உலக மொபைல் மாநாடு நடைபெற இருந்தது. இருப்பினும், கொரோனாவைரஸ் அச்சத்தின் காரணமாக நோக்கியா, வோடோபோன் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் வர மறுத்து விட்டது. 

எனவே அந்த மானாலும் ரத்தானது. இந்நிலையில் ஜப்பானில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளையும் ரத்து செய்ய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது காலவரையற்ற விடுமுறையை அரசு அறிவித்து இருக்கின்றது. இந்த அறிவிப்பின் காரணமாக சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் உச்சத்தில் இருப்பது உறுதியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school leave in china


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal