சவுதி அரேபியா விபத்து: 42 பேர் பலி; ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசியம்!
Saudi bus accident more info
மதீனா, சவுதி அரேபியா: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்கள் பயணம் செய்த பேருந்து சவுதி அரேபியாவில் விபத்துக்குள்ளானது. மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஜோரா என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக டீசல் லாரி மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்தக் கோர விபத்தில் 20 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட மொத்தம் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில், முகமது அப்துல் சோயிப் என்ற 24 வயது இளைஞர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முகமது அப்துல் சோயிப், பேருந்தில் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. விபத்தின் தீவிரத்தால் மற்றவர்கள் பலியான நிலையில், இவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
42 இந்தியப் பயணிகள் பலியான இந்தச் சோக நிகழ்வில், ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த சம்பவம் சற்று ஆறுதலை அளிக்கிறது. படுகாயமடைந்த அவருக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
Saudi bus accident more info