"ஆடுகளத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்துவிட்டார்கள்" - ஹர்பஜன் சிங் காட்டம்!
harbajan singh condemn to match stadium ind vs sa test
கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்களில் சுருண்டு படுதோல்வியடைந்தது. மேலும், இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் திணறியதால், போட்டி மூன்றே தினங்களில் முடிவுக்கு வந்தது.
இந்தப் போட்டிக்குப் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் குறித்து, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "இதுபோன்ற தரமற்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்துவிட்டார்கள். டெஸ்ட் வடிவத்துக்கு எந்த மதிப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றபோது, அங்கு பிட்ச்கள் நன்றாக இருந்தன. ஆனால், இங்கே பந்தைப் போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு ஆடுகளம் தரமற்றதாக இருக்கிறது" என்று சாடினார்.
"இந்த மாதிரியான ஆடுகளத்தை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதில் புரிவதில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இது தவறான விளையாட்டு முறை. இதுபோன்ற ஆடுகளங்கள் இளம் வீரர்களைத் திறமையில் முன்னேற அனுமதிக்காது" என்றும் ஹர்பஜன் சிங் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
English Summary
harbajan singh condemn to match stadium ind vs sa test