பரமக்குடி மாணவி கூட்டு பாலியல் வழக்கு: இறுதித் தீர்ப்பு நவ. 21-க்கு ஒத்திவைப்பு!
paramakudi school girl abuse case judgement date ADMK DMK
ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ஆம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு போக்சோ நீதிமன்றம் நவம்பர் 21-ஆம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்குவதாக உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கில், முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளிக் கடை உரிமையாளர் ராஜா முகமது மற்றும் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட அன்னலட்சுமி உமா, கயல்விழி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதலில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேர் மீது தனித்தனியாக இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றத்தில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தன.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இறுதித் தீர்ப்பு நவம்பர் 21-ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி புஷ்பராணி அறிவித்து, வழக்கை ஒத்திவைத்தார்.
English Summary
paramakudi school girl abuse case judgement date ADMK DMK