சவுதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியான பெரும் சோகம்!
Saudi Bus Accident 18 member family death
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியப் பயணிகள் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவர்கள் பயணம் செய்த பேருந்து சவுதி அரேபியாவில் கோர விபத்தில் சிக்கியது. மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நோக்கிச் சென்றபோது, ஜோரா என்ற இடத்தில் பேருந்து மீது டீசல் லாரி மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 45-ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 20 பெண்கள் மற்றும் 11 சிறுவர்கள் அடங்குவர். இந்தத் துயரச் சம்பவத்தில் மிக அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், விபத்தில் உயிரிழந்த 45 பேரில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இத்தனை பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோர விபத்தில், முகமது அப்துல் சோயிப் என்ற 24 வயது இளைஞர் மட்டும் அதிர்ஷ்டவசமாகப் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேருந்தில் ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்திருந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பலியானது குறித்துத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Saudi Bus Accident 18 member family death