பிறந்தநாள் வாழ்த்து கூட இல்லையா? — ஹீலோ விஜய் டிவி.. கலைஞர்களிடம் சாதி பார்க்கலாமா? விளாசிய நாஞ்சில் விஜயன்!
Not even a birthday greeting Hello Vijay TV Can we see caste in artists Nanjil Vijayan is a disgrace
விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்த நாஞ்சில் விஜயன், தனது இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிவசப்பட்ட கடிதம் ஒன்றை வெளியிட்டு விஜய் டிவி சமூக ஊடக குழுவின் நடத்தை குறித்து கடும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளாக விஜய் டிவியில் சிரிச்சா போச்சு, அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலக்கி, ரசிகர்களைக் கவர்ந்த நாஞ்சில் விஜயன், எவரும் செய்யத் தயங்கும் பெண்வேடத்தில் கூட சிரிப்பை பரப்பியவர். ஆனால், அவருடைய பிறந்தநாள் கடந்த வாரம் இருந்தபோதும், விஜய் டிவி சமூக வலைத்தளத்தில் அவருக்கு எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை என்பது அவரை வேதனைப்படுத்தியுள்ளது.தன் கைப்பட எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார்:
“சில கலைஞர்களுக்கு சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தீர்கள். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் என் பிறந்தநாளில் ஒரு சொல் கூட இல்லை. அது மறந்ததாலா? அல்லது வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டீர்களா?”அதிலும் அவர் வலியுறுத்திய வரிகள் ரசிகர்களைச் சிந்திக்க வைத்துள்ளன:
“பழைய காலத்தில் தொழிலை வைத்து உயர்ஜாதி - கீழ்ஜாதி என்று பிரித்தார்கள். இப்போது விஜய் டிவி சமூக வலைத்தளத்தில் உச்சப் புகழ்பெற்ற கலைஞர்கள் ‘உயர் ஜாதி’ போலவும், நம்ம மாதிரி அங்கீகாரம் தேடி வந்துக்கொண்டிருக்கும் கலைஞர்கள் ‘கீழ்ஜாதி’ போலவும் கருதப்படுகிறோம் போலத் தெரிகிறது.”
சமூக வலைத்தள நிர்வாகிகளின் பாரபட்சம் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்கலாம் என்று தெரிவித்து, இது குறித்து தெரிந்துகொள்ள அவர்களுக்காகவே இந்தப் பதிவை வெளியிடுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
“இது ஒரு விஷயமா கடந்து போ” என்று சொல்வோருக்கும் அவர் தெளிவாக பதில் அளித்துள்ளார்:“நம் உரிமையை நாமே கேட்டு வாங்க வேண்டிய காலம் இது. கேட்காமல் இருந்தால் அங்கீகாரம் ஒருபோதும் கிடைக்காது.”நாஞ்சில் விஜயனின் இந்த திறந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Not even a birthday greeting Hello Vijay TV Can we see caste in artists Nanjil Vijayan is a disgrace