விஜய் தேவரகொண்டாவுடன் முதல் முத்தத்தைப் பற்றி ஓப்பனாக பேசிய ராஷ்மிகா!
Rashmika opened up about her first kiss with Vijay Deverakonda
தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்திய பேட்டியில் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்த முதல் முத்தக்காட்சி பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். இது தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையின் முதல் திரைமுத்தம் என்றும், அதற்கான அனுபவத்தை திறம்பட பகிர்ந்துள்ளார்.
ராஷ்மிகா கூறியதாவது:“என் சினிமா கரியரில் நான் கொடுத்த முதல் முத்தம் ‘கீதா கோவிந்தம்’ படத்தில்தான். கதைக்குத் தேவையான காட்சி என்பதால் ஏற்றுக்கொண்டேன். ஆனால், மனதில் குழப்பமும் பதட்டமும் இருந்தது. விஜய்க்கும் அதே நிலை இருந்ததாக பிறகு தெரிந்தது. நாங்கள் கலைஞர்கள்… கதைக்கு தேவையானதை நடிப்பது நமது தொழில்முறை.”
அவர் மேலும் கூறினார்:“முத்தம் எனக்கு மிகவும் தனிப்பட்ட விஷயம். 200 பேர் முன்னிலையில் அந்த காட்சியை எடுக்க வேண்டியதால் அப்போது எனக்கு ரொம்பவே நெருடல். திருமணமான தம்பதிகளின் கதாபாத்திரம் என்பதால் காட்சியை இயல்பாகவே செய்ய வேண்டியிருந்தது… ஆனாலும் முதல் அனுபவம் என்பதால் உண்மையிலேயே பதட்டம் அதிகமாக இருந்தது.”
சுவாரஸ்யம் என்னவென்றால், ராஷ்மிகா முதல் திரைமுத்தம் கொடுத்த அதே நடிகரான விஜய் தேவரகொண்டாவுடன் அடுத்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளார்.2026 பிப்ரவரி 26-ஆம் தேதி உதய்பூரில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.
‘கீதா கோவிந்தம்’ படத்துக்குப் பிறகு ராஷ்மிகா ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ படத்திலும் முத்தக்காட்சியில் நடித்தார். விஜய் தேவரகொண்டாவும் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் லிப்-லாக் காட்சியில் நடித்தது ரசிகர்கள் அறிந்ததே.
திரைமுத்தத்திலிருந்து வாழ்க்கைத் துணையாக — ராஷ்மிகா, விஜய் காதல் பயணமே இப்போது ரியலான “ஹாப்பி எண்டிங்” நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
English Summary
Rashmika opened up about her first kiss with Vijay Deverakonda