உன்னை மாதிரி ஆளுங்களால என் தம்பி விஜய்க்குத்தான் அவமானம்.. நெட்டிசனுக்கு குஷ்பு கடும் கண்டனம்
People like you are a disgrace to my brother Vijay Khushbu strongly condemns the netizen
தலைவர் 173 படத்திலிருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் நடிகை குஷ்புவும் அவரது கணவரும் பல்வேறு தரப்பில் ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, ‘தவெக வெற்றி’ என்கிற ஐடி வைத்த நெட்டிசன் ஒருவர் தொடர்ந்து படுகேவலமான கருத்துகளால் குஷ்புவை அவமதித்து வந்தார்.
சுந்தர்.சி குறித்து,“கமல்-ரஜினி சேர்ந்து உன் கணவரை துரத்தி அடிச்சிருப்பாங்க போல”என்று அந்த நபர் பதிவிட்டதை பார்த்த குஷ்பு,
“என் செருப்பு சைசு 41. அடி வாங்கத்த தயார் ஆ?”என்று தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்தார்.
அதற்கும் மீறி, அந்த நெட்டிசன் மீண்டும் ஆபாசமான பதிலை பதிவிட்டதை பார்த்த குஷ்பு கடும் எரிச்சலுடன் பதற்றமான கருத்துகளை பகிர்ந்தார்.
அவர் கூறியதாவது:“உன்னை மாதிரி நபர்களால்தான் என் தம்பி விஜய்க்கு அவமானம். அவருடைய டிபியை வைத்து உன் முகத்தை மறைத்து இப்படி அசிங்கமான பதிவுகள் போடுறே! எவ்வளவு அசிங்கமானவனா இருந்தா உன் முகத்தை கூட காட்டத் தயக்குறே. பாவம்… உன்னை பெத்தவங்க. பெத்துட்டாங்க, ஆனா வளர்த்தா ஆளாக்க முடியல."
இந்த பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, குஷ்புவுக்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
People like you are a disgrace to my brother Vijay Khushbu strongly condemns the netizen