ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு சோதனை: எம்.பி.யின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தீவிர நடவடிக்கை!
West Bangal Governor bomb squard searech TMC MP
மேற்கு வங்காள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பா.ஜ.க. குற்றவாளிகளுக்கு ஆளுநர் ஆனந்தா போஸ் அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும், அவர்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் இன்று மதியம் மிகப்பெரிய அளவில் தேடுதல் வேட்டை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக வடக்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் ஆனந்தா போஸ், உடனடியாகத் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார்.
ஆளுநர் மாளிகை முன்பாகக் கொல்கத்தா காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் ஆனந்தா போஸ் தலைமையில், போலீசாரும் பாதுகாப்புப் படை வீரர்களும் ஒன்றிணைந்து, ராஜ்பவன் வளாகம் முழுவதும் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். இந்த திடீர் தேடுதல் வேட்டை, மேற்கு வங்க அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
West Bangal Governor bomb squard searech TMC MP