பள்ளி குழந்தைகளை கட்டாயப்படுத்தி போர் பயிற்சி அளிக்கும் ரஷியா! வலுக்கும் கண்டனம்!
Russian school student increasingly militarized
அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது தீவிரமாக போர் நடத்தி வருகிறது.
தொடர்ந்து 575 நாட்களுக்கும் மேலாக நடை பெற்று வரும் போரில் வெற்றி பெற இருதரப்பும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒன்றாக ரஷ்யா, தன் நாட்டு பள்ளி குழந்தைகளையும் போரில் ஈடுபடுத்த மறைமுகமாக தயார் படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கி குழி தோண்டுவது, கையறிக்குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு போர் திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது.
பள்ளிக்கல்வியில் நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி கூடங்களை அமைந்துள்ளது.

பயிற்சி பெறுவதற்காக மாணவ-மாணவியர்கள் வர மறுத்தாலும் அரசாங்கத்தால் வற்புறுத்தி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளி குழந்தைகள் போர் வீரர்கள் அணியும் உடை, தொப்பி போன்றவற்றை அணிந்து கொண்டு பயிற்சி எடுக்கின்றனர்.
இளைய தலைமுறையை எதிர்கால போர் வீரர்களாக ரஷ்யா கட்டாயப்படுத்தி மாற்ற முயற்சி செய்வதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Russian school student increasingly militarized