பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள்... ரஷ்ய அமைச்சர் தகவல்..! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா போர் கொடுத்ததையடுத்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதையடுத்து இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தது. இந்நிலையில் ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட பல்லாயிரம் கோடி இந்திய ரூபாயை பயன்படுத்த முடியாமல் வங்கிகளில் வைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கோவாவில் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, சர்வதேச சந்தைகளில் ரூபிளின் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் பல கோடி ரூபாய் பணம் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வங்கிகளில் இருக்கும் ரஷ்யாவினுடைய இந்திய ரூபாயை வேறு கரன்சிக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக இந்தியாவிடம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 2022-23 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் ரஷ்யாவிற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள் 11.6% குறைந்து $2.8 பில்லியனாகவும், அதே சமயம் இறக்குமதிகள் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்து $41.56 பில்லியனாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russian minister says we have unusable indian currency in crores


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->