போலந்தை தொடர்ந்து ருமேனியாவில் ஊடுருவிய ரஷ்யா டிரோன்: அதிர்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்..!
Russian drone infiltrates Romania after Poland
போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ரஷ்ய டிரோன்கள் ஊடுருவி சென்றுள்ளமை ஐரோப்பிய நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், போலந்து வான்வெளியில் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்தன.
இதனை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுது. இதனையடுத்து போலந்து வான்வெளியை பாதுகாப்பதற்கு உதவும் வகையில் ரபேல் விமானங்களை பிரான்ஸ் அனுப்பி வைத்தது.
இந்நிலையில் ருமேனியா வான்வெளியிலும் ரஷ்ய டிரோன் அத்துமீறி நுழைந்துள்ளதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. இதனை போர் விமானங்கள் மூலம் கண்காணித்ததாகவும், உக்ரைனின் எல்லை அருகே இந்த டிரோன் காணப்பட்டதாகவும் அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
சிலியா வெச்சே பகுதியில் முதலில் காணப்பட்ட இந்த டிரோன் பிறகு ரேடாரில் இருந்து மறைந்து விட்டதாகவும், அதேநேரத்தில் மக்கள் நிறைந்த பகுதிகளில் இந்த டிரோன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளதோடு, அதேநேரத்தில் குறித்த டிரோன் தவறுதலாக ருமேனியாவிற்குள் நுழைந்து இருக்காது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
English Summary
Russian drone infiltrates Romania after Poland